• Fri. Jan 24th, 2025

ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா.

ByI.Sekar

Mar 24, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் 11வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பாண்டி செல்வம் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார் . பள்ளியின் முதல்வர் வீரலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசி, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற லிட்டில் சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர் அருண் கலந்து கொண்டு தன்னம்பிக்கை உரையாற்றினார். திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் ராதாகிருஷ்ணன், மாநில பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி அசோசியேசன் தலைவர் லட்சுமி வாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். விழா ஒருங்கிணைப்பு பணிகளை பள்ளி இயக்குனர்கள் வாகினி கபில், ஆகியோர் செய்து இருந்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகள் மற்றும் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. பிரைமரி படித்து தொடரும் பிள்ளைகளுக்கு பட்டமளிப்பும், அதேபோல் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பும் வழங்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக லேசர் மின்னொளி வெளிச்சத்தில் மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் மாணவர்களின் யோகா, பிஞ்சுக் குழந்தைகளின் ஆடல், பாடல் சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பெற்றோர் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்