

நமது தாய்மொழியான தமிழ்மொழியை போற்றுவொம் என தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி பேசினார்.
கோவை பி.என்.புதூர் பகுதியில் நடைபெற்ற உலக தாய் மொழி தின விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான தமிழ் மொழி சார்ந்த பேச்சு மற்றும் ஓவிய போட்டியில் தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், கோவை இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பாக உலக தாய்மொழி தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு மற்றும் ஓவிய போட்டி பி.என்.புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் தங்களது தாய்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்தும் பேசியும், ஓவியம் வரைந்தும் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து பரிசளிப்பு விழா எழுத்தாளர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜமுனா அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட செயலாளர் ப.பா.ரமணி, சிறார் செயற்பாட்டாளர் கவிஞர் நான்சி கோமகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் நமது தாய்மொழியான தமிழ் மொழியை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார். உலகிலேயே சிறப்பு வாய்ந்த மொழியான தமிழ் மொழி நமக்கு தாய்மொழி என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் ஓவியர்கள் சூரியமூர்த்தி, ஞானகுமார் மற்றும் சுப்ரமணியம், ஏ.வி.ராஜன், கோட்டியப்பன், திருநாவுக்கரசு ஜான் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் அபுதாகீர், செய்தி தொடர்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

