• Fri. Dec 13th, 2024

நாகராஜா திடலில் உலக மீனவர்கள் தினவிழா

உலக மீனவர்கள் தின விழா நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 47_ மீனவ கிராமங்களில் பல்லாயிரக் கணக்கான மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர்.

குமரி மீனவர்கள் சமுகத்தில் இருந்து முதல் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் லூர்துஅம்மாள் சைமன்,தி மு க வை சேர்ந்த இரா. பெர்னாட். இருவரும் வெற்றிபெற்றது குளச்சல் சட்டமன்ற தொகுயில் இருந்து, இரா. பெர்னாடுவுக்கு பின், அதிமுகவின் சார்பில் மீனவ சமுகத்தை சேர்ந்த ஒருவருக்கு குளச்சல் சட்டமன்ற தொகுதியில் மீனவர் ஒருவர் போட்டியிட்டார் வெற்றி பெறவில்லை.

மக்களவை, சட்டமன்ற காலங்களில் மீனவர்கள் வைக்கும் கோரிக்கை. குமரியில் உள்ள 6_தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் மீனவ சமுகத்தினருக்கு வாய்ப்பு வேண்டும் என்ற குரல் எழுப்பி வேட்பாளர்கள் அறிவிப்பு வரும் வரை எதிர் பார்த்து 47_மீனவ கிராம மக்களும் காத்திருப்பார்கள். ஏமாற்றம் பல காலங்கள் ஏற்பட்ட போதும். தேர்தலில் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து வெற்றி களிப்பில் பங்கேற்று. பாஜகவை தோற்கடித்த மகிழ்வில், அடுத்த தேர்தல் வரட்டும் என எதிர் பார்த்து காத்திருப்பது வாடிக்கை. என்று தொடர்ந்த நிலையில், ஒரு எதிர் பாராத திருப்பமாக வாராது வந்த மாமணி போல். பாஜக விரிப்பது கபட வலையில்,காட்டில் சீதை பார்த்த பொய்மானை நம்பிய விஜயதரணி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என்ற உரிமையை ராஜூனாமா செய்ததால். குமரி மாவட்டம் மீனவர்களின் உரிமை கோரிக்கையான அவர்கள் இனத்தில் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றினார் முனைவர் தாரகை கத்பட். உலக மீனவர்கள் தின விழா மேடையில். குமரி கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேயன்,மேலாள் ஆயர் பீட்டர் ரெமியிஜீயூஷ், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் இரா.கண்ணப்பன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, நெல்லை நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், ரூபி மனோகர்,மீனவ சமுகத்தின் வெற்றி திருமகளாக விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பட், அருட் தந்தையர்கள் என ஏராளமான பேர் பங்கேற்று உலக மீனவர்கள் தினத்தையும், தங்கள் சமுகத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அவர்கள் சமுகத்தின் பெண்ணிற்கு கிடைத்த வெற்றியையும் சேர்ந்த விழாவை கொண்டாடி மகிழ்ந்த விழாவில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், பத்மநாபபுரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஊரில் இல்லாததால் பங்கேற்க வில்லை.

நாகராஜா கோயில் திடலில் நடைபெற்ற உலக மீனவர்கள் தின நிகழ்விற்கு , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்,குமரி மாவட்டம் அறநிலையத்துறை அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அமைச்சர் ராஜ. கண்ணப்பனை வரவேற்றதை மீனவ சமுகம் மதம் கடந்த மனித நேயத்தை போற்றினார்கள்.

கோட்டார் மறைக்கப்பட்ட ஆயர் நசரேயன் அவரது பேச்சில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவ சமுகத்தின் கோரிக்கையான நர்சிங் கல்லூரி அனுமதியை அவரது வீட்டிற்கே அழைத்து இன்முகத்துடன் அனுமதி நல்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், வைத்த கோரிக்கை கடலில் விபத்தை சந்திக்கும் மீனவர்களை விரைவாக கரைக்கு கொண்டு வர ஹெலிகாப்டர் தளம் மற்றும் கடல் ஆம்புலன்ஸ் என்ற மீனவர்களின் கோரிக்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை வெளி படுத்தினார்.

நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கள் அனைவருமே. அண்மையில் ஒன்றிய அரசு,மணவாளகுறிச்சி அருமணல் ஆலைக்கு புதிதாக மண் எடுக்க 1,144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அனுமதி நல்கிய உள்ளதை கண்டித்து பேசியதுடன். பன்னாட்டு பெட்டக முனையத்திற்கு எதிராக மீனவ மக்கள் போராட்ட களத்தில் தள்ளிய நிலைமையை மீண்டும் குமரி மாவட்டத்தில் ஏற்பட ஒன்றிய அரசு காரணமாக கூடாது என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்தினர்கள்.

உலக மீனவர்கள் தின விழா தீர்மானமாக. குமரி மாவட்டத்தில் அணுக்கனிமம் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத்தை கை விட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.