

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில்.குமரி மாவட்ட கடலோர காவல் படையினர் மற்றும் கிரேஷ தாதியர் பயிற்சி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசிய போதை பொருள் ஒழிப்பு தினமான ஜூன் திங்கள் 26_ம் நாள் அனுஸ்டிப்பு தினத்தை பொது மக்களுக்கு மற்றும் குமரியில் கூடியுள்ள சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் நடைபெற்ற உறுதிமொழி எடுத்தல் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்றார்கள்.
கடலோர பாதுகாப்பு குழுமம், தூத்துக்குடி மண்டல காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் தலைமையில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ராஜன், கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் நவீன் ஆகியோர் பங்கேற்றனர்.
கடலோர காவல் குழுமம் காவலர்கள் மற்றும் தாதியர் பயிற்சி மாணவ, மாணவிகள் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு சர்வதேச போதை ஒழிப்பு தினமான ஜூன் திங்கள் 26_ம் நாள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

