

குமரி மாவட்டத்தில் உலகப்போதை விழிப்புணர்வு தினமான ஜூன் 26ம் நாளான இன்று, நாசா முத்தம் பாரத் அபியான் சமுக நல அமைப்பின் சார்பில், கன்னியாகுமரி உட்பட மாவட்டத்தின் 23_பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களின் சுடர் ஓட்ட குழுவினர், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில் சங்கமம் ஆகி, பொது நிகழ்வு நடக்கவுள்ளது.
கன்னியாகுமரியில் தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு மண்டபம் முன் அந்தோணியர் உயர் நிலைப் பள்ளி மாணவர்களின் சுடர் ஒட்டத்தை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அருட்தந்தையர்கள் நெல்சன், உபால்டு மற்றும் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சரோஜினி, ஜெயஷிரி ஆகியோர் மாணவர்களுடன் கன்னியாகுமரி சுற்றுலா விடுதி வரை உள்ள ரவுண்டானா பகுதி வரை ஓட்டத்தில் ஓடி பங்கேற்றனர்.

கன்னியாகுமரியில் காலை நேரத்தில் நடந்த இந்த நிகழ்வை ஏராளமான சுற்றுலா பயணிகளும் பார்த்ததுடன் கை ஒலி எழுப்பி மாணவர்களை உற்சாக படுத்தினார்கள்.
மது, போதைப்பொருள் இல்லாதா இந்தியாவை உருவாக்குவோம் என சொல்லி ஓட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

