• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இளம் எழுத்தாளர்களுக்கான கவிமணி விருதுக்கு படைப்புகள் வரவேற்பு

Byமதி

Nov 19, 2021

கவிமணி விருதுக்கு அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் படைப்புகளை அனுப்பலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் குழந்தைகளில் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

இதனை செயல்படுத்தும் வகையில் பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளர்களிடம் இருந்து தமிழில் கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக, www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியில் இதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து டிசம்பர் 31-ந்தேதிக்குள் ‘பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணாசாலை, சென்னை-600002’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.