உலக மரபு வாரத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. இதன் பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி உலக மரபு வார விழா நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ஆன்லைன் நுழைவு கட்டணம் மூலம் ரூ.35-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.650-ம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.