• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பட்டப்படிப்பு முடித்தால் போதும் முதலமைச்சர் அலுவகத்தில் வேலை

ByA.Tamilselvan

May 25, 2022

அரசு வேலை கிடைத்தாலே கவுரவும்,அதிலும் முதலமைச்சர் அலுவலகத்தில் வேலை என்றால் அதை விட கவுரவம். பட்டப்படிப்பு முடித்திருந்தாலே போதும் இந்த வேலைக்குவிண்ணபிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. இதில் இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படுவதுடன், தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இப்பணியில் சேர் எஸ்.டி,எஸ்.சி பிரிவினருக்கு வயது 35 ம் ,பிசி,எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பாக 33ம் இருக்கவேண்டும்.ஊதியமாக ரூ650000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் செய்யப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. http://www.bim.edu/Tncmpf எனும் இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்கள் தேவைப்படின் இந்த இணையதளத்திலேய தெரிந்துகொள்ளலாம்.
திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.5.66 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களே இன்றே… இப்போதே விண்ணபிக்கவும்