• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நிலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 அரசு பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், கல்லாறு, பர்லியாறு, நஞ்சநாடு உள்ளிட்ட 9 அரசுப்பண்ணைகள் உள்ளன.

இவற்றில் 1,200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலியாக ரூ.425 மட்டுமே பெறுகின்றனர்.இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், கால முறை ஊதியம், ஊக்கத்தொகை உயர்வு, கல்வி தகுதிக்கேற்ப காலியாக உள்ள இடங்களை தற்காலிக பணியாளர்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை முதல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.