புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மாவூர் கிராமத்தில் குவாரி நடத்தி வருபவர் செல்வராஜ் இவர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிரஷர்களுக்கு சக்கை எனப்படும் மூலப் பொருள்களை விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் மாவூர் கிராமத்தில் இரண்டு தனியார் நிறுவனத்தினர் கிரஷர் வைத்து நடத்தி வருவதாகவும் இவர்கள் செல்வராஜுக்கு சொந்தமான குவாரியிலிருந்து தங்களுக்கு மட்டுமே மூலப்பொருள்களை வழங்க வேண்டும் எனக் கூறி பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 15ஆம் தேதி அன்று குவாரிக்குள் அத்துமீறி நுழைந்த கிரஷர் உரிமையாளர்கள் அங்கு நின்றிருந்த வாகனங்களில் உள்ள சாவியை எடுத்துச் சென்றும் குவாரி இயங்க முடியாத சூழ்நிலை ஏற்படுத்தியும் வாகனங்கள் செல்லும் வழிகளை மரித்தும் பிரச்சனை செய்துள்ளனர். இது சம்பந்தமாக செல்வராஜ் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அதிகாரிகள் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த உள்ளனர் இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குவாரி மூடப்பட்டு இருப்பதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த குவாரியின் உரிமையாளர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.