
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை,மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் அறியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை இணைந்து (waste wealth) கழிவுகளில் இருந்து வளமான பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்வது குறித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு இரண்டு நாள் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

அரியாங்குப்பத்தில் நடைபெற்ற பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி பெண்களுக்கான பயிலரங்கை தொடங்கி வைத்தார். இதில் அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயலரங்கில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பாலிதீன் கவர், வாட்டர் பாட்டில், ஜூஸ் பாட்டில்கள், உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வீட்டில் பயன்படுத்தக்கூடிய கலைப் பொருட்களை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பெண்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய கலை நயத்துடன் கூடிய பொம்மைகள், பூச்செடிகள்,மயில்கள், பென்குயின், சைக்கிள், வில்லு,மற்றும் பறவைகள், மீன் வகைகள், விலங்குகள், என பல்வேறு வகையான கலை பொருட்களை பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு நேர்த்தியுடன் செய்தனர்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி கூறும் போது…
மனித வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வகையில் இந்த பயிலரங்கம் அமைந்திருந்தது, எனவே பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாடு துறை அதிகாரி ரமேஷ் கூறும் போது….

தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு வளமான பொருட்களை உருவாக்குவது குறித்து இரண்டு நாள் பயிலரங்கில் மகளிர் சுய உதவி குழுவினர் ஆர்வமாக கலந்து கொண்டனர். இந்த பைலரங்கில் உருவாக்கப்பட்டுள்ள கலை பொருட்கள் சுற்றுச்சூழல் தினத்தன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் கவர்னர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது என்றார்.
கலந்து கொண்ட பெண்கள் கூறும் போது…
தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து கலைப் பொருட்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.பிளாஸ்டிக் கழிவுகளால் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொம்மைகள் பூச்செடிகளை கலைநயத்துடன் உருவாக்கி இருக்கிறோம். மேலும் இதை சந்தைப்படுத்தும் போது தங்களுக்கு வருமானமும் பெருகும் என்று குறிப்பிட்டனர்.
