மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் வன்னிய மகளிர் பெருவிழா இன்று நடைபெறுகிறது. இதற்காக கடற்கரையோரம் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து மகளிர் பெருமையை உணர்த்தும் வகையில் நாட்டியங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடைபெற்றன. விழா நடைபெறும் மேடைக்கு பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் வருகை புரிந்து விழாவில் பங்கேற்றுள்ள பெண்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தொடர்ந்து ராமதாஸின் மனைவி சரஸ்வதி அம்மையார் விழா மேடைக்கு வருகை புரிந்தார்.

வன்னியர் சங்கத் தலைவர் பூ.தா அருள்மொழி, பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வன்னியர் சங்க விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.