• Fri. Feb 20th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சென்னை திருவான்மியூர் அஞ்சலகத்தில் மகளிர் தின விழா

Byஜெ.துரை

Mar 9, 2023

சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை திருவான்மியூர் அஞ்சல் நிலையத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள அஞ்சல் நிலையத்தில் நிலைய அதிகாரி தன்ராஜ் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அஞ்சலக மக்கள் தொடர்பு துறை அலுவலர் தண்டாயுதபாணி
முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் கேக் வெட்டி அதை மகளிருக்கு உட்டி விட்டும் பரிசுகளை வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.இந் நிகழ்ச்சியின் போது அஞ்சலக மன மகிழ் மன்ற தலைவர் மாரிவேல் முத்து, நிலைய ஊழியர்களான மீனா, ரஜேந்திரன், கிருஷ்ணன், சாருலதா மற்றும் அங்கு பணிபுரியும் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.