• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

யாசகம் கேட்பது போல் திருடிய பெண்கள்..,

BySeenu

May 27, 2025

யாசகம் கேட்பது போல் வந்து திருடிய வடமாநில பெண்கள் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகளை – காவல் துறையினர் விசாரணை !!!

கோவை, கணபதி அருகே உள்ள அத்திபாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் யாசகம் கேட்பது போல் வந்த 7 வடமாநில பெண்கள் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள கம்பெனியில் இருந்த காப்பர் ஒயர் மற்றும் பித்தளை உலோகங்களை திருடி சென்று உள்ளனர்.

இது தொடர்பாக கம்பெனியின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோவை சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒரு பெண்மணி கம்பெனியில் உள்ள பாத்ரூமில் வைக்கப்பட்டு இருந்த பெனாயில் பாட்டிலையும் திருடி சென்றது சி.சி.டி.வி காட்சியில் பதிவாகி உள்ளது.

இதுபோல் சந்தேகத்திற்க்கு இடமளிக்கும் வகையில் யாரெனும் சுற்றி திரிந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.