• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காமராஜர் நகர் 2வது வார்டு பகுதியில் சாலை மற்றும் வாருகால் வசதி செய்து தர பெண்கள் போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Oct 9, 2023

ராஜபாளையம் அருகே காமராஜர் நகர் 2வது வார்டு பகுதியில் சாலை மற்றும் வாருகால் வசதி செய்து தர கோரி நாற்று நடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேத்தூர் காமராஜர் நகர் 2வது வார்டு பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வாருகால் வசதி மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரியும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் அப்பகுதி மக்கள் பலமுறை முத்துச்சாமிபுரம் ஊராட்சி மன்றத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் நூதன முறையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.