• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெண்களை ஆபாச வார்த்தைகளால் கேள்விகள் கேட்கும் டாக்டர் மீது புகார்

வில்லிவாக்கம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வரும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கேள்விகள் கேட்கும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகர் வேணுகோபால் தெருவில் சென்னை ஆரம்ப சுகாதாரம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர் சந்திரசேகர் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் பெண்களிடம் டாக்டர் சந்திரசேகர் ஆபாச வார்த்தைகள் பேசி அவர்களை பாலியல் வன்முறைக்கு தூண்டுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த டாக்டர் ஏற்கனவே ராஜமங்கலம் பகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அங்கிருந்து மாற்றலாகி இங்கு வந்ததாக கூறுகின்றனர்.

டாக்டர் சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள், அதுகுறித்து தங்கள் கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறினர். எனவே, பெண்களிடம் ஆபாசமாக பேசி வரும் டாக்டர் சந்திரசேகர் மீது மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.