• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ்

Byவிஷா

Jun 7, 2024

நாடு முழுவதும் இருந்து வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், தமிழக அரசு தனது வழக்கமான பணிகளை இன்று தொடங்கி உள்ளது.
தமிழக அரசு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், வழக்கமான பணிகளை மேற்கொள்ள துவங்கியது. நாடு முழுவதும் தேர்தல் திருவிழா நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த வாரத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் திருவிழா முடிவடைந்துள்ள நிலையில், நேற்று இரவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய உத்தரவுகள், சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் இந்த வாரம் முதல் தொடங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் ஜூன் 6ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளத் துவங்கியது. அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று அஞ்சப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் முடிவடைந்த நிலையில், இனி தமிழக அரசின் ஒவ்வொரு அறிவிப்பாக அடுத்தடுத்து வெளிவரலாம்.