

சேலத்தில் மத்திய சிறையில் ஆய்வுக்காக சென்ற சட்ட அமைச்சருடன் அத்துமீறி திமுக அரசியல் பிரமுகர்கள் நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய சிறையில் இன்று சட்ட அமைச்சர் ரகுபதி ஆய்வுக்காக வந்து இருந்தார் அப்போது அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது திமுகவை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலைக்குள் நுழைந்தனர். அப்போது சட்ட அமைச்சர் திமுக பிரமுகர்கள் தடுக்காமல் சென்றது அதிகாரிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மத்திய சிறையில் செல்வதற்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி உள்ள இந்த நிலையில் விதிமுறைகளை மீறி சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டிஎம் செல்வகணபதி மற்றும் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் கணவர் சேகர் உள்ளிட்ட திமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் உள்ளே சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.