• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இந்திய மருத்துவ சங்கத்துடன்
மத்திய அமைச்சர் ஆலோசனை

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா (பி.எப்.7) பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி விட்டது. இந்தியாவிலும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், நாட்டில் பரவி வரும் கொரோனா பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார்நிலை குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.