

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக எழுத்தறிவு தினம் முன்னிட்டு என்.எம்.ஆர் சுப்புராமன் நினைவு உறைவிட பள்ளியில் புத்தாக்க சிந்தனை பயிற்சி நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பயிற்சியின் போது மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுகையில் :
உலகம் முழுவதும் எழுத்தறிவு மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்கள் குறித்து எழுதப்பட்ட விபரங்கள் தான் இன்று நாம் பலவற்றில் சாதிக்க ஊக்கமளித்து வழிகாட்டுகிறது. மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை பல்வேறு வகைகளில் வளர்த்துக் கொண்டு வருங்கால வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி உரையாடினார்.
பயிற்சியின் போது மாணவ மாணவிகள் உற்சாகமாக பதிலளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் எழுது பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் கார்த்திக், ரமேஷ்குமார், சசிகுமார், பெரியதுரை மற்றும் கோபி ஆகியோர் பங்கேற்று களப்பணியில் ஈடுபட்டனர்.
காப்பக பொறுப்பாளர் காயத்ரி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மற்றும் பங்கேற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

