• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

82 % புள்ளிகளுடன் சென்னை வண்டலூர் பூங்கா சிறந்த பூங்காவாக தேர்வு…

Byகாயத்ரி

Sep 12, 2022

இந்தியாவின் மிகச் சிறந்த பூங்காவாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த உயிரியல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவைகளில் 82 சதவீத புள்ளிகளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.