மதுரை பெருக்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி 60 வது ஆண்டு ஆண்டுபட்டமளிப்பு கல்லூரியில் விழா நடைபற்றது.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் நாராயணன் தலைமை வகித்தார் உயர்நீதிமன்ற நீதி அரசர் சிவஞானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரன் வரவேற்புரை கூறி உறுதிமொழிச் வாசித்தர்.
அறுபதாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதி அரசர் சிவஞானம் மாணவர்களிடம் பேசும் போது
உயர்ந்த நோக்கத்தோடு நீங்கள் இருக்கும் இடத்தில் இந்த கல்லூரி அமைத்து கல்வியை வழங்கி வாழ்த்துரை வழங்கிய நிர்வாகி திருவாளர் நாராயணன் மற்றும் முதல்வர் முனைவர் சந்திரன் அவர்களையும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்கான வந்துள்ள உங்களையும் , உங்களது பெற்றோர்களையும் முதற்கண் வணங்கி வரவேற்கிறேன்
உங்களது பெற்றோர்கள் உங்களுக்கு தேவையான கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கும் நீங்கள் கல்லூரி கல்வி முடித்து வெற்றி பெற்று நீங்கள் பட்டம் பெறுவதற்கும் பாடுபட்டிருக்கிறார்கள் .
உங்களை எல்லாம் சிறுவயது முதல் மலர் செடி போல் தண்ணீர் வைத்து வளர்த்து அதை பார்த்து மகிழும் நேரம் நீங்கள் பட்டம் பெறும் இந்நேரம்.
திருமணம் ஆகி ஒரு பெண் புகுந்து வீட்டிற்கு செல்லும்போது அணிகலன் அணிவது மரபு.
பட்டம் பெற்று செல்லும் உங்களுக்கெல்லாம் வாழ்க்கைக்கு தேவையான சில அணிகலன்களை மட்டும் நான் அணிவித்து அனுப்ப விரும்புகிறேன்.

இந்த அணிகலன் எல்லாம் உங்களின் வாழ்க்கைக்கும் மனித குலத்திற்கும்
பெரிதும் பயன்படும்.
வாழ்க்கைக்கு சில அணிகலன்கள் தேவை என்பதை சுருக்கமாக கூற விரும்புகிறேன் .
முதல் அணிகலன்களாக இரக்கம் இருந்தால் தான் மனிதர்களின் உணர்களை புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் கண்களில் இரக்கம் இல்லை என்றால் அது கண்ணல்ல அது ஒரு புண்.
கண்ணின் பயன் இரக்கப்படுவதாகும் எல்லோருக்கும் இரக்கப்படுபவர்களாக இருங்கள் அது உங்களுக்கு முதல் அணிகளாக இருக்கும். இரண்டாவது அணிகளான்களாக வெட்கம் என்பது நமக்கு தவறு செய்வதெல்லாம் கட்டுப்படுத்த உதவுகிறது.
சிறை தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருப்பதினால் தான் நாம் தவறு செய்ய மறுக்கிறோம். தகப்பனார் , தாயார் நம்மை ஏளனமாக பேசுவார்கள் ஊர் மக்கள் இலக்கார மிக பேசுவார்கள் என்ற வெட்கம் இருப்பதினால் தான் நாம் தவறுகள் செய்ய பயப்படுகிறோம்.
இதெல்லாம் நம் குடும்பத்திற்கு ஆகாது என வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள். வெட்கம் என்பது சிறப்புடையது.
அறிவில்லாதவன் கூட மண்ணில் வாழ்ந்து விடலாம் ஆனால் இரக்கமில்லாமல் தவறு செய்யும் மனிதனை வேதனை படுத்தும் வள்ளுவர் கூட தனது குறளில் உள்ளது போல பண்புடன் வாழ வேண்டும் என கூறியுள்ளார்.
ஊன் உடை அச்சம் நமது அடிப்படையில் சாப்பாடு டிரஸ் போன்று நாம் வெட்கமின்றி வாழக்கூடாது.
எல்லோருக்கும் உங்கள் வாழ்க்கை வழிகாட்டியாக திருக்குறள் போல் வாழ வேண்டும் நீங்கள் அனைவருமே தாய் தந்தையருக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று சிந்தனையோடு பட்டத்தை வாங்கி சென்று சமுதாயத்தில் எந்த நிலையை அடைய வேண்டும் என நீதியரசர் சிவஞானம் கூறினார்.




