• Mon. May 6th, 2024

ஊழியர்களுக்கு செக் வைத்த விப்ரோ நிறுவனம்..!

Byவிஷா

Nov 9, 2023

விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 3நாட்களில் விடுமுறை முடிந்து அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும், அப்படி வரவில்லையென்றால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள மெயிலில், கலப்பின வேலை மாதிரியை நோக்கிய நகர்வு, நேருக்கு நேர் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், விப்ரோவின் நிறுவன கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், மேலும் பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மெயிலை அந்நிறுவனத்தின் தலைமை ஹெச்.ஆர் சௌரப் கோயல் அனுப்பியுள்ளார். இந்த புதிய அலுவலக விதியை அனைத்து அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் வரும் ஜனவரி 7, 2024 முதல் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது அதாவது வேலை நீக்கம் போன்ற விஷயங்களையும் வீணாக சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நிறுவனத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தும் நிலையில், இது படிப்படியாக அனைத்து நிறுவங்களுக்கும் குறிப்பாக ஐடி துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல நிறுவனங்களும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அலுவலக வேலை என்ற கலாச்சாரத்திற்கு முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில், சில நிறுவனங்கள் மட்டும் வொர்க் பிரம் ஹோம் மற்றும் வொர்க் பிரம் ஆபிஸ் என்ற இரண்டு முறையையும் பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *