• Sun. May 5th, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பது குறித்து..எடப்பாடியார் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்காமல் இருப்பது ஏன்..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 எண்ணெய்க் கிணறு அனுமதி குறித்து எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு இதுவரை முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? கையெழுத்து போட நாடகம் போடுகிறாரா? எதிர்க்கட்சிகளின் குரலுக்கு பதில் சொல்லாமல் சர்வாதிகாரி போல முதலமைச்சர் நடக்கலாமா? என முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர், ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,
நீர் மேலாண்மையில் திமுக அரசு நூறு சகவீதம் தோல்வி அடைந்துள்ளது. டெல்டா விவசாயிகள் தங்கள் விளைவித்த பயிரை தாங்களே அழிக்கிற அந்த கொடுமையை பார்த்து அதனால் மன அழுத்தத்திலே உயிரை விட்ட அந்த பரிதாப நிகழ்ச்சிகளை கவலை அளிக்கக்கூடிய கண்ணீர் நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறோம்.
இப்போது வைகையிலே உபரி நீரை வெளியேற்றாமல் அணையின் நீர்மட்டத்தின் மேல் உயர்த்த முடிவு செய்து இருப்பதாக ஒரு செய்தி ஆங்காங்கே பரவலாக பேசப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி இருப்பினும் தேனி மாவட்டத்தில் மழை அளவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைய வாய்ப்புள்ளது என நீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.
மேலும் அணைக்கு நீர்வரத்து 2,693 கன அடியாகவும், வெளியேற்றம் 69 கன அடியாக உள்ளது. மேலும் முல்லைப் பெரியாரில் வினாடிக்கு 1,855 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 127 அடியாக உள்ளது.வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் குறிப்பாக மேலூர், பேரணை,,கள்ளந்திரி, திருமங்கலம், 58 கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள் இது ஒரு நியாயமான கோரிக்கை தான். 
  கள்ளந்திரி பகுதியில் 45,000  ஏக்கர் ரெண்டு போக பாசனத்திற்கும், மேலூர் பகுதியில் 86,000 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும், திருமங்கலம்  19,500  ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும்  தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். வைகையில் 6000 கன அடி இருக்கும் பொழுது கள்ளந்திரி, மேலூர் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது தற்போது  9000கன அடி உள்ளது அதனால் கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம், 58 கால்வாய் ஆகியவற்றிக்கு சேர்த்து தண்ணீரை திறந்து விடலாம். விவசாயிகள் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து திறக்க வேண்டும்.
கடந்த காலங்களில் குடிமராமத்து திட்டத்தை எடப்பாடியார் செய்தார் அதன் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டது. தற்போது குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தாததால் நீரை தேக்க முடியவில்லை. தொடர்ந்து விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் விவசாயிகள் பயிர்களை நடும்போது உரிய தண்ணீர் கிடைக்கவில்லை, தண்ணீர் கிடைத்தாலும் மருந்து கிடைப்பதில்லை மருந்து கிடைத்தாலும் அதற்குரிய ஆதார விலை கிடைக்கவில்லை.
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால், தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். சென்னையில் பிறந்து வளர்ந்த  ஸ்டாலினுக்கு விவசாயி பற்றிய கவலையை அறியவில்லை. ஏற்கனவே திமுக ஆட்சியில் ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருக்கும் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு அதன் பின் படித்துப் பார்க்காமல் கையெழுத்து போட்டு விட்டேன் என்று கூறினார். இன்றைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணற்றுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து எடப்பாடியார் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் முதலமைச்சர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல மறுத்து சர்வாதிகாரி போல நடக்கிறார்.
எந்த கேள்விக்கும் மௌனத்தை கடைப்பிடிக்கிறார் ஏற்கனவே டெல்டா பகுதியில் காவிரி பிரச்சனையில் முதலமைச்சர் கைவிரித்து விட்டார். தற்போது இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் கையெழுத்து போட நாடகம் ஆடுகிறார் என்று மக்கள் பேசுகிறார்கள்.

நீர் மேலாண்மை பற்றி அரசுக்கு கவலை இல்லை இன்றைக்கு விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைமை உள்ளது. ஆகவே முதலமைச்சர் புத்திசாலிதனமாக செயல்படவில்லை ஆகவே காவிரியை போல் இதையும் கைவிடாமல் விவசாயிக்குரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *