இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடரை புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், வரும் அக்டோபர் மாதத்திற்குள் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிட பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 480 கோடி ரூபாய் செலவில் 44 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அடுத்த நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இருந்து 2,285 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.