விருதுநகரில் உள்ள சாலைகளில் 90 சதவிகித சாலைகளின் பாதாள சாக்கடை மூடிகள் விபத்தை ஏற்படுத்த கூடிய பெரும் பள்ளங்களாக உள்ளன. இரவில் வெளிச்சம் குறைவான காமராஜர் பைபாஸ் சாலை, படேல் ரோடு போன்ற பகுதிகளில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இது போன்ற பள்ளங்களினால் விபத்தில் சிக்க கூடிய அபாயம் உள்ளது.

ஆகவே வரும் முன் காப்போம் என்ற பெரியோர்கள் வாக்கின்படி விபத்து ஏற்படுவதற்கு முன்பே இதனை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நல ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.





