• Sat. Apr 20th, 2024

தோல்வியின் நாயகன் பிரபுதேவாவை காப்பாற்றுமா? பஹீரா

Byதன பாலன்

Feb 27, 2023

பிரபுதேவா 2022 ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்து வெளியான தேள், பொய்க்கால் குதிரை, மைடியர் பூதம் என மூன்று படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது

பிரபுதேவாவுக்கு என்று தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள், ரசிகர்கள் வட்டம் என ஒன்று இல்லை. இருந்தபோதிலும் வியாபாரம் உள்ள ஹீரோக்கள் கால்ஷீட் கிடைக்காதவர்கள்அவரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து படமெடுப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.அப்படி ஒரு முயற்சிதான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘பஹீரா’ திரைப்படம். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்துவரும் திருச்சி பரதன் பிலிம்ஸ் பஹீரா படத்தை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது

இப்படத்திற்கான முதல் டிரைலர்2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.மூன்று ஆண்டு காத்திருப்புக்கு பின் வெளியாகும் பஹீரா படத்தினை புதிய படமாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ‘பஹீரா’ படத்தின் புதிய டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த டிரைலரை நடிகர் விஷால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படமாவது பிரபுதேவாவை தோல்வியில் இருந்து காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *