• Fri. Mar 29th, 2024

ஊரடங்கு நீடிக்குமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Byகாயத்ரி

Nov 29, 2021

தமிழகத்தில் நாளை ஊரடங்கு முடிய உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.கடந்த மே மாதம் பாதிப்பு உச்சத்தை அடைந்த நிலையில், முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும்,அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது . தளர்வுகள் நாளையுடன் நிறைவடையவுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். புதிய வகை ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவினால் அதன் எதிர் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என அவர் எச்சரித்திருந்தார்.கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் தடுப்பூசி செலுத்தியோரையும் அந்த வகை தொற்று தாக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, அதற்கான ஆயத்த நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று கூறியிருந்தார்.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதால் ஒமைக்ரான் ஆலோசனையின் போது முக்கிய இடம் பிடிக்கும் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *