• Fri. Apr 26th, 2024

10 ரூபாய் நாணயம் செல்லுமா..? ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

Byகாயத்ரி

Apr 8, 2022

10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி சில வருடங்களுக்கு முன்பாக 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நாணயம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியும் பரவ ஆரம்பித்தது. இந்த 10 ரூபாய் நாணயங்களை கடைகளிலும், பேருந்துகளிலும் வாங்க மறுத்தனர். எனவே ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டு 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பிறகு சென்னை மக்கள் இந்த 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தினார்கள். ஆனால் சென்னையை தாண்டி வேறு எந்த இடத்திற்கு சென்றாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். ஒருவேளை உங்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் அதிகமாக இருந்தால் அதை வங்கிகளில் சென்று நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். மேலும் இந்த நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி எதற்காக பரவியது என்ற காரணம் தெரியவில்லை. எனவே இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து ஒரு வேடிக்கையான ட்வீட்-ம் சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *