• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் – கோவை ரோட்டில் அரசு பஸ்ஸை வழிமறித்த காட்டு யானைகள்…

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் – கோவை இடையே காரமடை வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை வழித்தடத்தில் அரசு பேருந்து ஒன்று இயக்க பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணம் செய்ய வேண்டும். இப்பகுதியில் யானைகள் வாகனங்களை வழிமறிப்பது இயல்பான விஷயம் தான் ஆனால் அதனை கடந்து செல்லும் வரை பயணிகளுக்கு திக்… திக்…. அனுபவமாகவே இருக்கும்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில்மஞ்சூரில் இருந்து புறப்பட்ட பஸ் கெத்தை கொண்டை ஊசி வளைவு பகுதியில் 3 யானைகள் பஸ்ஸிற்கு முன்பு நடந்து சென்று மறித்த வாரே நடந்தது. அதன் பிறகு ஒரமாக நின்று வழிவிட்டது.