• Fri. Apr 26th, 2024

பத்திரிக்கையாளரிடம் அத்துமீறிய அஜய் மிஸ்ரா

Byமதி

Dec 15, 2021

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயிகள் மீது நடந்த வன்முறையில் 8 பேர் இறந்தனர். இது தொடர்பாக அஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் உள்ளார்.

கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிவித்திருந்தது. அந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று தன் மகனை சிறையில் சந்தித்துவிட்டு, இன்று லக்கிம்பூர் ஆக்ஸிஜன் ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, ஆஜய் மிஸ்ராவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, அந்த பத்திரிக்கையாளரை தள்ளிவிட்டு அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி வீசினார். மேலும் அவரை அவதூறான வார்த்தைகளால் கண்டபடி திட்டினார். பத்திரிகையாளரை அவர் அநாகரிகமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *