• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்

ByRaja

Feb 7, 2023

நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…
பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாக காணப்படுகிறது.
இன்நிலையில் மழவன் சேரம்பாடி.சேரங்கோடு குந்தலாடி .பாட்டவயல் .பிதிர்காடு ஓவேலி.எல்லமலழ. போன்ற பகுதிகளில் உலா வருவதோடு விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. மேலும் வீடுகளை உடைத்தும் பொது மக்களை கொல்வதுமாக தொடர் கதையாக மாறியுள்ளது. ஒரு வருடத்தில் முப்பதுக்கு மேற்பட்டோரை காட்டு யானை தாக்கி உள்ளது.மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவது என்றால் உயிரை கையில் பிடுத்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.. அதே போல் காலையிலும் எங்கு காட்டு யானை மறைந்து நிற்குமோ என்ற அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.இன்நிலையில் பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி ஐந்து கோவில் பகுதியில் விடியற் காலை ஐந்து மணிக்கு யானை ஊருக்குள் புகுந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அலறடித்து வீட்டினுள் புகுந்துள்ளனர்.


இரவில் காட்டு வந்த நிலையில் இப்போது யானை காலையிலேமக்களின் குடியிருப்புக்கு வருகிறது.இது சம்மந்தமாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது ஆனால் வனத்துறை வந்ததாக தெரிய வில்லை என பொது மக்கள் ஆவேசமடைந்துள்ளனர். காட்டு யானைகளை ஊருக்குள் வராதா நிலையில் வனத்துறையினர் பாது காப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்…