• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை தொழிற்சாலையில் இரவு நேரங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் 5 மணி வரை5 மணி முதல் இரவு 1மணி வரை இரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை மூன்று சீப்டுகளாக ஆண்கள் பெண்கள் என பணியாற்றி வருகின்றனர்கள்.

இரவு நேரங்களில் பணியாற்றுவதற்காக தங்களது வீடுகளில் இருந்து தொழிற்சாலைக்கு வரும் வழிகளிலும் வேலை முடிந்து தங்களது வீடுகளுக்கு செல்லும் வழிகளிலும் கூட்டம் கூட்டமாக திரியும் காட்டெருமைகள் மற்றும் சிறுத்தை, கரடிகளை கண்டு வீடுகளுக்கு செல்ல முடியாமலும் பணிக்கு செல்ல முடியாமல் தொழிற்சாலைகளிலே படுத்து உறங்கிக் கொண்டு காலை நேரம் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ,வீட்டுக்கு முன்பாகவே மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருமைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி பொது மக்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்