• Thu. Apr 25th, 2024

பெண்கள் உயர்கல்வி பயில தடை ஏன்?
அமைச்சர் நேடா சொன்ன விநோத விளக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தநிலையில் தற்போது பெண்களுக்கு உயர்கல்வி பயிலவும் தடை விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா முகமது இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார். மாணவிகள் கல்லூரி வரும்போது திருமணத்துக்கு செல்வதுபோல் ஆடை அணிந்து வருகிறார்கள். மேலும் ஆண்களின் துணையின்றி அவர்கள் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள். எனவே இந்த தடை அவசியமாகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *