கரூர் புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;-

விஜய் பிரசாரத்தில் பெரிய மக்கள் வெள்ளத்தில் போலீஸ் பாதுகாப்பு என்பது மிக மிக குறைவாகவே இருந்தது .கரூர் முழுவதும் மின்சாரம் தடை செய்துள்ளனர். கூட்டத்துக்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்தது தான் பிரச்சனைக்கு காரணம்.
மரணத்தில் அரசியல் பேசுவதை விட உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.நேரடியாக கரூர் செல்கிறேன் பாதிக்கப்பட்ட மக்களையும் குடும்பங்களையும் சந்திக்க உள்ளேன். கரூருக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து உண்மை நிலை என்ன என்பதை தெரிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பேசுகிறேன்.

இந்த சம்பவம் தவறான முன்னுதாரணம் இது மாதிரி இனி நடக்கக் கூடாது கேப்டன் கூட இருந்தவள் நான் 1990-ல் திருமணமான போது பெரிய கூட்டத்தோடு சென்றிருக்கிறேன். ஆனால் கரூர் சம்பவம் எல்லோருக்கும் மனது கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகள் பெண்கள் இறந்திருக்கிறார்கள்.துயரமான சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.இது வேதனையான ஒரு நிகழ்வு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.