• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மாபியாக்களை பாதுகாப்பது யார்..? ராகுல் காந்தி கேள்வி

ByA.Tamilselvan

Jul 30, 2022

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாரம் அருந்திய 42பேர் பலியான நிலையில் போதைப்பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்? என ராகுல்காந்தி கேள்விஎழுப்பி உள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. அதை வாங்கி அருந்திய ஏராளமானோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி 42 பேர் உயிரிழந்தனர்; 97 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த சாராய சாவு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
கண்மூடித்தனமாக போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார்..?; இந்த மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்..?” என கேள்வி எழுப்பியுள்ளார்.