• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதானி மீதான குற்றச்சாட்டு பின்னணியில் இருப்பது யார்?

Byவிஷா

Nov 22, 2024

அதானி மீதான குற்றச்சாட்டு பின்னணியில் இருப்பது யார் என்பது பற்றி ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி இது என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. கவுதம் அதானி, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், இந்திய அரசு வழிக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கையை அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் ஜனநாயக கட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு கவுதம் அதானி எக்ஸ் தளத்தில் வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தார். இதுவும் அமெரிக்க ஆளும் கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்கு பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஸ்புட்னிக் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.