

ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசையமைக்கப்போவதாக, கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார்..
பிரபல இயக்குநர் ஷங்கரின் முதல் திரைப்படமான படம் ஜென்டில்மேன் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தை கே டி குஞ்சுமோன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது!
இந்த படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு கேடி குஞ்சுமோன், ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவித்தார். ஜென்டில்மேன்2 படத்துக்கு ஒரு பிரபல இசையமைப்பாளர் இசை அமைக்க உள்ளதாகவும் இதைச் சரியாகக் கண்டுபிடித்தால் தங்கக் காசுகள் பரிசளிக்கப்படும் எனவும் குஞ்சுமோன் தெரிவித்தார்.
தற்போது கேடி குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்துக்கு எம் எம் கீரவாணி இசையமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பழம்பெரும் இசையமைப்பாளரான கீரவாணி சமீபத்தில் வெளியாகி உள்ள பாகுபலி உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஜென்டில்மேன் 2 படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
