துள்ளுவதோ இளமை பிட்டுபடத்தில் நடித்த நடிகர் தனுஷ் இன்று தமிழ் தெலுங்கு, இந்தி, என பல மொழிகளில் நடித்து தன்னை நிருபித்தவர்இன்று உலகளவில் முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் ‘தி க்ரே மேன் என்ற புதிய ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அவென்ஜர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் ஹலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரயான் கோஸ்லிங், க்ரிஷ் ஈவனஸ் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களில்ஒருவராக நடித்து, இந்திய நடிகர்களில் ஒருவர் இப்படிப்பட்ட மரியாதையை பெறுவது இதுவே முதல்முறைஏற்கனவே தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
நெட்பிளிக்ஸில் வெளியாகும் திரைப்படங்களில், இதுவரை அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக தி க்ரே மேன் உருவாகியுள்ளது. இந்தப் படம் 2022 ஜுன் மாதம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.