மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் விழாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை திமுக நிர்வாகிகள் அழைத்துச் சென்று தொலைத்து விட்டதாகவும்,
திமுக நிர்வாகி இடம் தாய் கேட்டபோது அவருக்கு மிரட்டல் விட்டுள்ளனர். இதனால் மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார், கடந்த 21ஆம் தேதி மதுரையில் புதிய பாலம் திறப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தந்தார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக சார்பாக அனைத்து கிராம பகுதியில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதில் பெரியகுளம் அருகே உள்ள ஏ மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த திமுக கிளைக் செயலாளர் சீனிவாசன் A. மீனாட்சிபுரம் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து செல்லும்போது மனநிலை பாதிக்கப்பட்ட தங்கப்பாண்டி என்ற இளைஞரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அழைத்துச் சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை மதுரையில் விட்டுவிட்டு மற்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் திரும்பி உள்ளனர்.
இதற்கு இடையே அவரது தாய் பிச்சையம்மாள் தனது மகனை காணவில்லை என இரண்டு நாட்களாக தேடிப் பார்த்து உள்ளார்.
மேலும் திமுக நிர்வாகி சீனிவாசன் மகனை அழைத்துச் சென்றதாக அவரது வீட்டுக்கு சென்று கேட்டபோது நான் உன் மகனை அழைத்துச் சென்றேன். ஆனால் எங்கே போனாய் என்று எனக்கு தெரியாது நீ வேணா உன் மகனை போய் தேடி கொள்ளு என்று கூறி அவரை மிரட்டி உள்ளார்.

இதனால் மகனைக் காணவில்லை என தாய் பிச்சையம்மாள் தனது மற்றொரு மகனான அழகுராஜாவை அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் மனநில பாதிக்கப்பட்ட மகனை காணவில்லை கண்டுபிடித்து தாங்கள் என புகார் அளித்துள்ளார்.
மேலும் ஆளும் கட்சி நிர்வாகிகள் என்பதால் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் மகனை காணவில்லை என தாய் காவல் நிலையத்தில் கண்டுபிடித்து தருமாறு தஞ்சம் அடைந்துள்ளனர்.






