• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறை எப்போது..?

Byவிஷா

Jul 8, 2023

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியாகி உள்ளது.
அதன்படி ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், அரையாண்டு தேர்வு டிசம்பர் 11 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரையும் நடைபெறும். இவற்றைப் பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே காலாண்டுக்கு ஒரு வாரமும் அரையாண்டுக்கு பத்து நாட்களும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையால் விரைவில் வெளியாக உள்ளது.