• Tue. Feb 18th, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்

BySeenu

Dec 3, 2024

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்
கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து வீல்ஸ் மாரத்தான் போட்டியின் 5வது பதிப்பை நடத்தியது. விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை கலெக்டர் கிராந்தி குமார்பாடி, ரூட்ஸ் குழும நிறுவனங்கள் தலைவர் கே.ராமசாமி மற்றும் டாக்டர் எஸ். ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தானை தொடக்கி வைத்தனர். கவுரவ விருந்தினர்களாக மாதேஷ் ஜெயபால், விக்ரம் நாராயண், அஜித் ஜோஸ், செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மையத்தில் இருந்து தொடங்கியது. 10 கிமீ, 5 கிமீ, 3 கிமீ மற்றும் 1கிமீ என 4 வெவ்வேறு பிரிவுகளில் அனைத்து வயதினரையும் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாரத்தானில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் 3 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ பிரிவுகளில் இதில் கலந்து கொண்டனர்.