தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை-2கப்
பீன்ஸ் ,கேரட், உருளைக்கிழங்கு- பொடியாக நறுக்கியது-1கப்,
பிரிஞ்சிஇலை, பட்டை, கிராம்பு- சிறிது,
நெய் (அ) டால்டா ,
பிரியாணி பொடி-2டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் நீள நீளமாக நறுக்கியது–2 ,
பச்சை மிளகாய்-6,
புதினா, கொத்தமல்லி தழை-பொடியாக நறுக்கியது,
உப்பு தேவையான அளவு,
இஞ்சி பூண்டு விழுது- 1டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் பட்டை, பிரிஞ்சிஇலை, கிராம்பு போட்டு வதக்கி பின் காய்களை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு நன்கு வதக்கவும், பிரியாணி பவுடரை சேர்த்து வதக்கி 4கப் தண்ணீர் ஊற்றி உப்பு- சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி, கேஸ் இறங்கியதும் மூடியை திறந்து மல்லி இலையை தூவி சிறிது நெய் விட்டு கிளறி பரிமாறவும். சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.