• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

வரும் 31ம் தேதி முதல் வாட்ஸ் அப் வேலை செய்யாது..!

ByA.Tamilselvan

Dec 26, 2022

வரும் 31-ம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அத்துடன், கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ் அப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில், வரும் 31-ம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 5, சாம்சங் கேலக்ஸி 3 ஆகிய முக்கிய போன்கள் இதில் அடங்கும். எல்ஜி, லெனோவோ, ஹுவாவேய் உள்ளிட்ட சில முன்னணி போன்களும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.