18 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த தம்பதி ஐஸ்வர்யா, தனுஷ் ஜனவரி மாதம் திடீர் என்று அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். ஐஸ்வர்யா கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். உடலளவிலும், மனதளவிலும் ஐஸ்வர்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
தனுஷை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா, முன்பை விட சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நேற்று, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். தற்போது, புத்தகம் படிப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, தன் குழு வேலைக்காக வரும் முன்பு படிப்பதாக தெரிவித்துள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு கூறி வருகிறார்கள்!