பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த சிறிது காலங்களிலேயே வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதல்வர் பகவந்த் மான் செயல்படுத்த திட்டமிட்டதாகவும் ஆனால் அதனை மத்திய பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பஞ்சாபில் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இதனை செயல்படுத்த டெல்லியில் நாங்கள் நான்கு ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அதனை மத்திய பாஜக தடுத்து நிறுத்துகிறது. ஒருவருக்கு நல்ல நேரம் வந்து விட்டால் அவருடைய எண்ணங்கள் எல்லாம் ஈடேறும் என்பது போல டெல்லியில் வேண்டுமென்றால் நீங்கள் அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தலாம் ஆனால் பஞ்சாபில் விரைவில் நாங்கள் அந்த திட்டத்தை செயல் படுத்துவோம். அதனை தொடர்ந்து பிற மாநிலங்களும் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை கொண்டு வரும் என அவர் கூறினார்.