வாட்டி வதைக்கும் வெயிலில் மக்கள் தங்கள் உடல்நலனை பாதுகாத்துக்கொள்வது குறித்து தெலுங்கா மற்றும் புதுச்சேரி ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தராஜன் பல்வேறு ஆலோசனைகளை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்
நாளை மறுநாள் மே.4 முதல் கத்திரி வெயில் துவங்க உள்ளது. ஆனால் ஏப்ரல் முதல்வாரத்திலிருந்தே கத்திரி வெயிலுக்குஇணையாக வெயில் வெலுக்க துவங்கியுள்ளது. அதிகபட்சமாக வேலூர் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை கோடை வெப்பம் வாட்டி வதைப்பது இயல்பு.
. அந்த வகையில் மருத்துவரும் இருமாநில ஆளுநரு மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டரில் பக்கத்தில் சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதில், “கோடை வெயிலினால் ஏற்படும் உடல்நல பாதிப்பும்,ஆபத்தும்… உடல் உஷ்ண தாக்கத்திற்கான அறிகுறிகள் 1.அளவுக்கு அதிகமான வியர்வை, நாக்கு மற்றும் தோள் வறட்சி ஏற்படுதல். 2.மனக்குழப்பம், பேச்சுக்குழறுதல், தலை சுற்றல், மயக்கம், வலிப்பு நோய், நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லலாம். இதை தடுப்பது எப்படி? 1.மெல்லிய பருத்தி நூல் மற்றும் கதர் ஆடைகள் அணிவது, 2. தண்ணீர் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் அருந்துவது 3. அதிக வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, 4. இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் வெயிலில் செல்வதை தவிர்ப்பது.” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.