

வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தம்பிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்
.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்
இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் நம் தாய் மொழியான தமிழும்,இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது இதுவே போதுமானது . 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் போதும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக நிழல்நிதி அறிக்கை வெளியிடும் கட்சி பாமக தான்.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கோட்டையில் கொடியேற்றி, நிஜ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஐந்தாண்டு காலம் ஆட்சி கிடைத்தால் சொடக்கு போட்டு, தமிழகத்தை முன்னேற்றி விடலாம். ராமதாஸ் பெற்று தந்த 10.5 சதவீத ஒதுக்கீட்டை உச்ச மற்றும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
தமிழக அரசு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாவிட்டால் தம்பிகள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று அவர் பேசினார்.
