• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. ராஜன் ஏற்பாட்டில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், ஏழை எளிய பொதுமக்கள் என 480 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவண முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி, வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா, கவுன்சிலர் குணா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.