• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீலகிரி-கூடலூர் பகுதியில் மின்சார கம்பத்தில் வெல்டிங் ..உடனடியாக அகற்ற வேண்டுகோள்

ByRaja

Feb 5, 2023

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் முன்னெச்சரிக்கை இன்றி தடுப்பு பைப் மின்சார கம்பத்தில் வெல்டிங் செய்யப்பட்டது.அதனை உடனடியாக அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கூடலூர் பகுதியில் நடைபாதை கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்டது. மக்கள் இந்த நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர் .இந்த சுழலில் வயது முதிர்ந்தவர் சிறு குழந்தைகள் பள்ளி மாணவ மாணவியர் விழுந்து விடுவர் என்ற எண்ணத்தில் இந்த நடைபாதை யில் தடுப்பு பைப்பு அமைக்கப்பட்டது . இந்த பணியானது நகரமன்றத்தில் எடுத்துறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் டெட்டர் விப்பட்டு ஒப்பந்தகாரர்களிடம் வழங்கப்பட்டது .


இந்த பணியை அவசர அவசரமாக நடைபெற்றது. தடுப்பு கம்பி வெல்டிங் செய்யும் போது முன்னெச்சரிக்கை மேற்கொள்ளாமல். ஆபத்தை உணராமல் புதிய பேருந்து நிலையம் வீனஸ் ஹோட்டல் பகுதியில் உள்ளமின்சார கம்பத்தை சேர்த்து தடுப்பு பைப்பை இனைந்து வெல்டிங் செய்து விட்டனர்.இப்படி மின்சார கம்பத்தில் வெல்டிங் செய்த பைப்பில் மின்கசிவு வரும். இதனால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதே போன்ற ஒருசம்பவம் தேவர் சோலைப்பகுதியில் தேயிலைகத் தோட்டத்தில் வேலை செய்து வந்த பெண் மின்சார கம்பம் அருகே முற்புதர் அகற்ற முற்பட்ட போது மின்சாரம் தாக்கி இறந்தார்..
இதே போன்ற சம்பவம் நேர்ந்து விடாமல் இருக்க ஒப்பந்த காரர்களிடம் வழங்கப்படும் இது போன்ற பணிகளை அரசு அதிகாரிகல் நேரில் பார்வையிட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் நடை பெறாவன்னம் இருக்கும் எனதன்னார்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.